Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் – பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து கிராம பஞ்சாயத்துகள் பொறுப்பேற்றது முதல், கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்க மருப்பதாக குற்றம்சாட்டி ஊராட்சி பஞ்சாயத்து பெண் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது வரை மாவட்ட ஆட்சியர் நிதி ஏதும் ஒதுக்காததால் 32 ஊராட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட   பஞ்சாயத்து தலைவர் திருமதி தீபா அன்பழகன்  தன்னுடைய கிராமப் பஞ்சாயத்துக்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொரோனா காலத்தில் கிராமங்களை தூய்மையாக வைத்திருக்க கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாங்கக் கூட நிதி ஆதாரம் இல்லை என தன்னுடைய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தார். ஆனால் ஆட்சியர் அனுமதி தராததால் திருமதி தீபா அன்பழகன் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முற்பட்டார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதால் ஆட்சியர் அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Categories

Tech |