திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாத்தாவை பார்க்க சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லண்டனை சேர்ந்த கிரஹாம் பரலி என்ற முதியவர் தனது குடும்பத்தை விட்டு பராமரிப்பு இல்லத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாத்தாவால் வயது முதுமையினாலும் அவருக்கு இருந்த நடுக்குவாத நோயினாலும் பேத்தியின் திருமணத்திற்கு தனியாக பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை நிபுணரான பேத்தி அலெக்ஸ் பியர்ஸ் முக்கிய முடிவு ஒன்றை மேற்கொண்டார்.
அதன்படி திருமணம் முடிந்த பெண்கள் புகுந்த வீட்டிற்கும் தேன் நிலவிற்கு செல்வது வழக்கம் ஆனால் பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் தனது கணவருடன் சேர்ந்து 320 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு தாத்தாவை சந்திக்க சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக தன் எதிரே தம்பதி வந்து நிற்பதைப் பார்த்த தாத்தா கிரஹாம் அதிர்ந்து போனார். கொரோனா காரணமாக தனது பேத்தியை கட்டி அணைக்கும் வாய்ப்பை அவர் இழந்திருந்தாலும் ஆனந்த கண்ணீர் பொங்க மூன்று பேரும் உணவு மற்றும் கேக் சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.