விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியில் வரதராஜன் (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகனும் இருக்கின்றார். இந்நிலையில் வரதராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குடும்பத்தினர் வரதராஜனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வரதராஜன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு வரதராஜன் மயக்கம் அடைந்ததால் குடும்பத்தினர் வரதராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு வரதராஜனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.