தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற இன்ஜினியர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான விஜய் பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடியில் விஜய் பிரகாஷின் தாத்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் கல்லகுடிக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து தனது உறவினர்களுடன் விஜய் பிரகாஷ் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் உள்ள சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி விஜய் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.