நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் நிலைதடுமாறி பழனிச்சாமி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதனைதொடந்து பழனிசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்த சிறுவன் சரவணன் மற்றும் அதியரசு ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூராவிற்கு நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.