சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் காவல்துறையினர் அழித்தனர்.