3-வதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம் பால் ஊற்றி கொன்ற பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு சில வருடங்கள் முன்பாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளார். அதன்பின் தேன்மொழிக்கு 8 மாதங்களுக்கு முன்பாக மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தேன்மொழி முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் இருக்கும் அவரின் பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று தங்கியுள்ளார்.
ஆனால் அந்தப் பெண் குழந்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பாக திடீரென உயிரிழந்துள்ளது. அது பற்றி அப்பகுதியில் உள்ளவர்கள் கேட்டதுக்கு பாம்பு கடித்ததால் தான் அந்த குழந்தை இறந்ததாக குடும்பத்தினர் சிசுவை மேம்பாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் மூன்றாவதாக பிறந்த குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் படி வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கிராமத்திற்கு சென்று அடக்கம் செய்யப்பட்ட பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தேன்மொழியின் தாயார் உமா என்பவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பெண் சிசுவுக்கு எருக்கம்பால் ஊற்றிக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் உமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை பாட்டியை எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.