ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின், பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துப்பொருட்கள் உள்ளன இதன் மருத்துவ பலன் குறித்து பார்ப்போம் .
1. திராட்சைப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சி, பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெறும், இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும்.
2. இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக அருந்தி வர இதயம் பலப்படும் படபடப்பு நீங்கும்.
3. உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீரும், மயக்கமும் நீங்கும்.
4.கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை அருந்தி வர அதிகப்படியான கொழுப்பு சத்து குறையும்.
5. திராட்சையில் குடல் புண் ஆற்றும் திரவம் உள்ளது கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.