புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி பெருன்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இந்நிலையில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ராஜினாமா கடிதத்தை அளிக்க சபாநாயகர் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் மேலும் ஒரு ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.