Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகிற்கு மாபெரும் இழப்பு…. நடிகர் விக்ரம் ஆழ்ந்த அனுதாபங்கள்….!!!

விவேக்கின் மறைவிற்கு முன்னணி நடிகர் விக்ரம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரசிகர்கள்,திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர் விக்ரம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பரும் ஆனவர் கலைஞன் விவேக்.

இவரது மரண செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இது தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கு மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |