Categories
உலக செய்திகள்

பெரும் துயரம்…. ”மகாராணி எலிசபெத்” காலமானார் – கண்ணீரில் ”பிரிட்டன்” மக்கள்…!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு. அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத்.

1926 ஆம் ஆண்டு பிறந்த மகாராணி எலிசபெத், பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர். பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த சாதனையை முறியடித்தவர் எலிசபெத்.விக்டோரியா மகாராணியின் 63 ஆண்டுகால சாதனையை முறியடித்து, 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து எலிசபெத் சாதனை.

பிரிட்டன் ராணி என்று எலிசபெத் அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாக உள்ளார். 54 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகித்தார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதிலும் ராணி எலிசபெத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இரண்டாம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட 14 பிரதமர்களின் காலத்தில் அரசியாக பொறுப்பு வகித்தவர். வின்ஸ்டன் சர்ச்சிலை தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார்.எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி எலிசபத் 1952 பிப்ரவரி 6இல் பிரிட்டன் மகாராணியாக முடிசூடினார்.

மகாராணி எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் பதவி ஏற்கிறார்.இளவரசர் வில்லியம் உட்பட அனைத்து குடும்ப வம்சத்தினரும் பால்மோரல் அரண்மனையில் குழுமியுள்ளனர்.அமெரிக்காவில் இருக்கும் இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு விரைந்துள்ளார்.லண்டனில் 1926 ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்த மகாராணி எலிசபெத், தனது 96 வது வயதில் காலமானார்.

Categories

Tech |