கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் சிறிது நேரத்தில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது பெரும்பாலான நாடுகளில் சோதனை முயற்சியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நார்வே நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டே 23 முதியவர்கள் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருமே 80 வயதுக்கும் அதிகமானவர்கள். மேலும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மிக மோசமான உடல்நிலையுடன் இருந்துள்ளனர். இந்த 23 பேரின் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் வேறு ஏதாவது நேரடி தொடர்பு உள்ளதா? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட வேண்டாம் என்று நார்வே பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.