Categories
அரசியல் மாநில செய்திகள்

மாபெரும் சமூக அநீதி… பேரிடியாக வந்துடுச்சி…. சட்டப் போராட்டம் நடத்துங்க… தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை….!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் மீதான பேரிடி இது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்து வலுவான சட்ட போராட்டம் நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என கோருகிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |