Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயியை லத்தியால் தாக்கும் காவலர்…. கொதித்தெழுந்த தமிழக விவசாயிகள்…!!

போலீசார் ஒருவர் விவசாயின் தலையில் லத்தியால் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈடுபட்டுவருகின்றனர் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர் இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய பரபரப்பு வீடியோ வெளியாகியது. இந்நிலையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தற்போது விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் பரவி உள்ளது. குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே வேளையில் டெல்லியில் விவசாயி ஒருவரின் தலையிலேயே போலிசார் லத்தியால் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |