ஜம்மு காஷ்மீரின் பூச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை கிட்டத்தட்ட 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அந்த பகுதியில் மீட்பு பணி என்பது மிகவும் காலதாமதமாக நடைபெற்றிருக்கிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக 11 பயணிகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
25 பயணிகள் படுகாயத்துடன் அருகே இருக்கக்கூடிய மண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீட்பு பணியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது வரை அனைவருமே மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 11 பேர் வரை தற்போது வரை உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய இரங்கல்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து இருக்கக்கூடிய நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அறிவித்திருக்கிறார். இந்த படுகாயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை என்பது கவலைக்கிடமாக இருப்பதால் இந்த உயிரிழப்பு என்பது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.