ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவிலும் வழக்கமாக இயங்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பு தினமும் இரவு 10.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து சிவகங்கை வழியாக காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை கோட்டை பட்டினம் வரை சென்று கொண்டிருந்துள்ளது.
இந்த பேருந்தின் மூலம் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இதனையடுத்து தற்போது அந்த பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் பேருந்தை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.