Categories
உலக செய்திகள்

30 ஆண்டுகளில் இல்லாத….. பற்றி எரியும் காட்டுத்தீ….. ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணி….!!

காட்டில் பரவியுள்ள தீயை ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிரீஸ் நாட்டில் வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அனைத்து திசைகளிலும் காட்டுத்தீயானது பரவி வருவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த இலையில் எவியா நகரில் காட்டுத்தீயானது 6-வது நாளாக பரவி வருவதால் அங்குள்ள மரங்கள் மற்றும் காடுகளுக்கு அருகிலுள்ள வீடுகள் தீயில் கருகி நாசமாகின.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தீயை அணைக்கும் பணியில் குரோஷியா, ருமேனியா, இஸ்ரேல், ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரீஸ் நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக கிரீஸின் முக்கிய பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது இன்று வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |