ரஷ்ய டேங்கர் கப்பலை உக்ரைன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் கீழ் கிரீஸ் கைப்பற்றியுள்ளது.
ஈவியா தீவில் (Evia) ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக கிரீஸ் கைப்பற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 27-நாடுகளின் துறைமுகங்களில் இருந்து ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்களை தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிரான புதிய கடுமையான தடைகளை சில விதிவிலக்குகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் ஏதென்ஸுக்கு அருகிலுள்ள கிரேக்க நிலப்பரப்பில் இருந்து எவியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள Karystos அருகே ரஷ்யக் கொடியுடன் கூடிய பேகாஸ் (Pegas) என்ற அந்த கப்பல் 19 ரஷ்ய பணியாளர்களுடன் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கிரேக்க கப்பல் அமைச்சக அதிகாரி கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் ஒரு பகுதியாக இது கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார் .
இதனை தொடர்ந்து பேகாஸ் கப்பலில் இன்ஜின் பிரச்சனை ஏற்பட்டதால் Karystos-க்கு சற்று அருகில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று ஏதென்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.