கடலுக்கு அடியில் திறந்து உள்ள அருங்காட்சியகத்தை கண்டு களிக்கும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் தங்களது அனுபவம் பற்றி கூறியுள்ளனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிரீஸ் நாட்டிலுள்ள அலோனிசோஸின் கிரேக்கத் தீவில் ஏஜியன் கடல் அமைந்துள்ளது. இந்த கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் ஒன்று ஸ்கூபா டைவிங் வீரர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த மதுபானைகள், 5வது நூற்றாண்டில் விபத்துக்குள்ளான கப்பல் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகம் கிரீஸ் நாட்டின் முதல் UNDER WATER MUSEUM ஆகும்.
இந்த மியூசியத்தை பற்றி ஸ்கூபா டைவர் ஒருவர் கூறியதில் “தொல்பொருள் மற்றும் டைவிங் இவற்றின் கலவை எனவும் இவ்விடத்தில் டைவிங் செய்பவர்களுக்கு புதுவித மற்றும் சிறப்பான அனுபவம்” என்றும் கூறியுள்ளார். இந்த அருங்காட்சியகமானது பெரிஸ்டெரா தீவுக்கு அப்பால் கடந்த 2020ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கிரீஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சுற்றுலாத்துறை மீண்டும் இதனை திறந்துள்ளது. இதனால் மியூசியத்திற்கு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தின் கட்டணம் ஆனது ஸ்கூபா பயணத்தின் விலையை விட 50% உயர்த்தியுள்ளது.
ஒருமுறைக்கு 110 டாலர் கட்டணத் தொகை செலுத்த வேண்டும். இதனை 300க்கும் மேற்பட்ட டைவர்கள் கண்டுகளித்துள்ளனர். இதுவரை ஃபெர்ச்சர், Danish wine-cellar தயாரிப்பாளர் லிசெட் ஃபிரடெலண்ட் போன்ற ஸ்கூபா டைவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி ஃபிரடெலண்ட் கூறியதில் “இது ஒரு பிரம்மிப்பூட்டும் அனுபவம் மற்றும் நான் மது ஏற்றி செல்லும் கப்பலில் இருப்பதாக நினைத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். அதிலும் கடலில் ஆழம் அதிகம் என்பதால் ஸ்கூபா டைவிங் நன்றாக தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் சிறப்பு பார்வையாளர்கள் டைவிங் செய்ய அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.