சீனாவில் பச்சிளம் குழந்தை ஒன்று 24 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இதுவரை 33 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Henan மகாணத்திலிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பு கருதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Henan மகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் Xingyang என்ற நகரில் பச்சிளம் குழந்தை ஒன்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் 24 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
A baby has been rescued after being trapped under the rubble of a collapsed house for 24 hours in Xingyang city, central China's Henan Province. #GLOBALink pic.twitter.com/0Myzssqce2
— China Xinhua News (@XHNews) July 23, 2021
இதையடுத்து இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த குழந்தையுடைய உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளிலிருந்து அந்த பச்சிளம் குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்ட காட்சி இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.