கடந்த 1985 ஆம் வருடத்தில் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்பக்கத்தில், இடம்பிடித்த பச்சை நிற கண்களுடைய பெண் தற்போது இத்தாலியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கினார்கள். அதன்படி, பச்சை நிற கண்களுடைய சர்பத் குல்லா என்ற பெண் இத்தாலி நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதனை, அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. இவர் கடந்த 1984 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதி பெண் என்ற முறையில் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தார். இவரின் புகைப்படமும் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டை பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
இவர் கடந்த 2014 ஆம் வருடத்தில், பாகிஸ்தானில் இருந்தார். அப்போது, அங்கு போலியான அடையாள அட்டையை வாங்கியிருக்கிறார். எனவே, அதிகாரிகள், அவரை நாடு கடத்த முயற்சித்த போது அங்கிருந்து தலைமறைவானார்.
அதன்பின்பு, அவரை காபூல் நகருக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஜனாதிபதி, ஷர்பத் குல்லாவிற்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பளித்து, அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும் கொடுத்தார்.
அதனையடுத்து, தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைபற்றிய பின், அந்நாட்டு மக்கள், விமானத்தில் வெளியேறி சென்ற போது, ஷர்பத் குல்லா இத்தாலியில் தஞ்சமடைந்திருக்கிறார்.