Categories
மாநில செய்திகள்

பசுமை பட்டாசு தான் …. ” கொண்டாட்டம் இல்லை”…… அதிர்ச்சி அறிவிப்பால் கவலை …!!

தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் , இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அது மட்டுமில்லாமல் விபத்து மற்றும் மாசு மற்றும் ஒளி இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த மாவட்ட அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் தெரிவித்துள்ளது.

Image result for தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மேலும்  உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கூடும் இடம் , பேருந்து நிலையங்களில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க கூடாது. அதே போல் குடிசைப்பகுதிகள் ,  எளிதில் தீ பற்றக் கூடிய இடத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதே போல மருத்துவமனை , பள்ளிகள் ,  நீதிமன்றங்கள் , வழிபாட்டு தளங்கள் போன்ற அமைதியான இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் சொல்லி உள்ளது.

Image result for தீபாவளி பசுமை பட்டாசு

அதோடு குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், பெரியவர்களுடன் இருப்பது அவசியம் என்றும் , பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர் , மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Image result for தீபாவளி பசுமை பட்டாசு

கடந்த ஆண்டுதான் முதல் முறையாக ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டிருந்தாலும் தமிழக அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு நாளைக்கு தீபாவளியன்று அதிகாலை ஒரு மணி நேரம் , மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இந்த ஆண்டு முதல் பசுமை பட்டாசு பயன்படுத்தினாலும் 2 மணி நேரம் தான் என்பதால் சிறியவர்கள் சற்று கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |