இங்கிலாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை போட்டதற்கான ஆதாரத்தை காட்டும் கிரீன் பாஸ்ஸை வைத்திருந்தால் மட்டுமே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல முடியும் என்னும் விதியை அந்நாட்டின் தடுப்பூசி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை விரட்டியடிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு புதிய விதி அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது இந்த செப்டம்பர் மாத இறுதியிலிருந்து கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டதற்காக அரசாங்கம் வழங்கும் க்ரீன் பாஸ் என்னும் சுகாதார அட்டையை வைத்திருந்தால் மட்டுமே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதாகும். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி அமைச்சர் தெரிவித்துள்ளார்.