இங்கிலாந்து போக்குவரத்துத்துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக அந்நாட்டின் உயர் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள போக்குவரத்து துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக இங்கிலாந்தின் உயர் ஆணையம் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற திங்கட்கிழமையில் இருந்து கன்னட நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் பயணிகள் கனடாவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்த 2 நாட்கள் கழித்தும் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.