மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ராமநாதபுரம் பள்ளி வளாகங்களில் காய்கறி கீரை தோட்டம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் ஆயிரம் காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணியை புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பசுமை பரப்புகளை அதிகரிக்கும் வண்ணம் 429 ஊராட்சிகளில் ஆயிரம் காய்கறி-கீரைகள் வளர்க்கும் திட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன்படி தற்போது மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் ஆயிரம் காய்கறி கீரை தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தோட்டத்தில் பப்பாளி, முருங்கை, கருவேப்பிலை, காய்கற மற்றும் கீரை வகைகள் போன்ற பயன்தரும் மரங்கள் மற்றும் செடிகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புத்தேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 1000 காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறும் போது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகமாக காணப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை கொடுப்பதன் மூலம் வளரும் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கூறியுள்ளார். அதோடு மகபேறு கால இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு தாய்-சேய் நலமானது உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டருமான பிரதீப் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அருள் (சத்துணவு திட்டம்), வீரப்பன் (சிறுசேமிப்பு) மற்றும் ரகுவீர கணபதி (வளர்ச்சி) போன்றோர் உடன் இருந்தனர். அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், அப்துல் ஜாபர் மற்றும் தாசில்தார் முருகவேல் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.