Categories
உலக செய்திகள்

கிரீன்லாந்தில் நிலவும் அதிக வெப்பநிலை.. 8.5 பில்லியன் பனிக்கட்டிகள் உருகியது.. ஆபத்தில் கடலோர பகுதிகள்..!!

கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகமாக நிலவுவதால், இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகத்தொடங்கியுள்ளது.

பூமியில், அண்டார்டிகாவிற்கு அடுத்து, இரண்டாவது பெரிய பனிக்கட்டியை உடைய கிரீன்லாந்தில், சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களில் நீர் பனிப்பாறைகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பது தெரிகிறது.

ஆர்டிக் பெருங்கடலில் அதிக வெப்பநிலை நிலவுவதால் கிரீன்லாந்து, 22 ஜிகா டன் அளவுடைய  பனிக்கட்டியை இழந்திருக்கிறது. கிரீன்லாந்தின் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2012 மற்றும் 2019 ஆம் வருடங்களில் இது போன்ற இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்போது, அதிக அளவு பனி இழப்பு ஏற்பட்டுள்ளதால், கடலின் நீர் பாயும் அளவும் உயர்ந்துள்ளது.  காலநிலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதால், கடல் நீர் வெப்பமாகி, அதன் அளவு அதிகரிக்கும். இதனால் கடலோரப் பகுதிகள், முதலில் நிலத்தை இழக்கும். கடைசியாக நீரில் மூழ்கக்கூடிய ஆபத்து உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |