குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், அவரது பிறந்தநாளில் ராஷ்டிரபதி ஜிக்கு வாழ்த்துக்கள். கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலிலிருந்து இந்தியா பெரிதும் பயனடைந்துள்ளது. ஏழைகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வத்தை ஒருவர் எப்போதும் காணலாம். சர்வவல்ல ஆண்டவன் அவரை நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையுடன் ஆசீர்வதிப்பாராக என்று பதிவிட்டுள்ளார்.
Greetings to Rashtrapati Ji on his birthday.
India has gained significantly from his insights and understanding of policy matters. One can always see his passion towards empowering the poor and downtrodden.
May Almighty bless him with a long and healthy life. @rashtrapatibhvn
— Narendra Modi (@narendramodi) October 1, 2019