Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அழைப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் ஓய்வூதிய கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் இன்று காலை 10:30 மணி முதல் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக மனு கொடுக்கலாம். மேலும் ஓய்வூதியத்தில் இருக்கும் தங்களுடைய சந்தேகங்களையும் கூட்டத்தில் தீர்த்துக் கொள்ளலாம். எனவே ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |