மேன் விஷஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியளவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.
பொழுதுபோக்குக்காக நாம் பல்வேறு நிகழ்ச்சி தொடர்களை பார்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியை கண்டு கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பார்வையாளர்களின் ரசனையை உணர்ந்த சேன்னல்கள் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சியை புகுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம்.
அந்தவகையில் டிஸ்கவரி சேன்னல் ‘மேன் Vs வைல்ட் என்ற ரசனை மிக்க நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றது. இதில் நடித்துள்ள பியர் கிரில்ஸ் காடுகளில் தனியாக சிக்கி கொண்டால் எப்படி மீள்வது , எப்படி வாழ்வது என்று பல்வேறு யுக்திகளை சொல்லி கொடுப்பார்.
இந்த நிகழச்சி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில மாத்திற்கு முன்பு கூட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் காடுகளில் மேற்கொண்ட சாகச பயணம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த்_தும் அந்த நிகழ்ச்சியில் சாகசம் பண்ண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் காட்டு தீயாய் பரவியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் “மேன் விஷஸ் வைல்ட்” நிகழ்ச்சியை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருப்பதோடு தங்களின் மகிழ்ச்சியை ட்வீட்_டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். #ManvsWild என்ற ஹாஷ்டக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது சென்னை அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.