பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் கர்ப்பமடைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டு தான் கர்ப்பம் தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், “கர்ப்பம் தரித்த சில நாட்களில் தனக்கு ‘சிக்கல்கள்’ இருந்தது. தற்போது மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் எல்லா இடங்களிலும் எனக்கு வலிக்கத் தொடங்கியுள்ளது. நான் எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தவில்லை.
தற்போது 25 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் எனக்கு எந்த குழந்தை பிறக்கபோகிறது என்பது தெரியவில்லை. ஆனால் உடல் ரீதியாக இன்னும் கடினமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நிறைய சிந்தனைகளை பதிவிடுவது எளியது. ஆனால் உடல்ரீதியாக எதுவும் கடினமானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/B7__2WVnlFC/?utm_source=ig_web_button_share_sheet