Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிமேல் தேங்காய் சட்னி இப்படி அரைங்க … அசந்துடுவாங்க …

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 2

முந்திரி – 4

சர்க்கரை – 1/4 ஸ்பூன்

பச்சை மிளகாய்  – 2

பூண்டு – 3 பற்கள்

இஞ்சி – சிறிய துண்டு

பெருங்காயத்தூள் – சிறிது

கடுகு – 1/4 ஸ்பூன்

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவைக்கேற்ப

உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்

பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான தீயில் ஒரு பிரட்டு பிரட்டி வறுத்துக் கொள்ள வேண்டும். மிக்சியில் தேங்காய்த்துருவல் , மிளகாய் ,பொட்டுக்கடலை , இஞ்சி , பூண்டு, உப்பு , சின்ன வெங்காயம் , முந்திரி , சர்க்கரை   சேர்த்து   கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு ,உளுந்தம்பருப்பு ,வரமிளகாய் , கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி அரைத்த சட்னியில் கொட்டினால் சுவையான  தேங்காய் சட்னி தயார் !!!

Categories

Tech |