Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ரசப்பொடி வீட்டிலேயே அரைக்கலாம் !!!

ரசப்பொடி

தேவையான  பொருட்கள் :

தனியா – 1/2 கப்

காய்ந்த மிளகாய் – 2 கப்

துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் –   2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 4  டேபிள்ஸ்பூன்

மிளகு – 4 டேபிள்ஸ்பூன்

கடுகு – 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

விரலி மஞ்சள்  – 1  சிறியது

எண்ணெய் – தேவையான அளவு

ரசப்பொடி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப்  போட்டு பக்குவமாக வறுத்துக் கொள்ள  வேண்டும் . பின்னர் மற்றொரு கடாயில் மற்ற பொருட்களை போட்டு இளந்தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் மிக்ஸியில் வறுத்த  மிளகாயை தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் மற்ற பொருள்களையும் தனியாக அரைத்து இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்து பாட்டிலில் போட்டு ரசம் வைக்கும் பொழுது தேவையான அளவு பொடியைப் போட்டு ரசம் வைத்தால், ரசத்தின் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்.

Categories

Tech |