திருமண நாளில் மணமகன் ஓடியதால் மணமகளின் உறவுக்கார வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருமணத்திற்காக தேதி குறித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகன் நவீன் திடீரென்று வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் மணமகளின் வீட்டார்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும் எப்படியாவது குறித்த தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர்.
மேலும் தனது மகளுக்கு குறித்த நாளில் திருமணம் ஆகவில்லையென்றால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்துள்ளனர். அப்போது மணப்பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் தானாகவே முன் வந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த உறவுக்கார வாலிபருக்கு இந்த பெண்ணுக்கும் திருமணத்தை சந்தோசமாக முடித்து வைத்துள்ளனர்.