மெக்சிகோவில் வயல்பகுதியில், திடீரென்று பள்ளம் தோன்றியதால் மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள பியூப்லா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மரியா என்ற பகுதியில் இருக்கும் வயல் பகுதியில் திடீரென்று பூமி உடைந்து அடியில் சென்றுள்ளது. இதில் சுமார் 300 அடி அகலம் மற்றும் 60 அடி ஆழம் கொண்ட பெரிய குழி உருவாகியிருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் பூகம்பம் வெடிக்கபோவதாக கருதி பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
அந்த வயலின் உரிமையாளர், குழி ஏற்படுவதற்கு முன்பாக அதிக சத்தத்துடன் இடி இடித்தது என்று கூறியுள்ளார். இதுகுறித்து புவியியல் ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடத்திற்கு கீழ் பூமியில் பாறைகள் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் திடீரென்று நீரோட்டம் ஏற்படும்போது இவ்வாறு குழி உருவாகும் என்று கூறியுள்ளனர்.
இவை சிங்க்ஹோல் என்று கூறப்படுகிறது. நிரோட்டமானது, பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை கரைப்பதால் இவை உண்டாகிறது. அதாவது நீர், சுண்ணாம்புப் பாறைகளை விரைவாக கரைத்து விடும். இந்த பகுதியில் பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகள் இருந்துள்ளது.
அப்போது மழைநீர் அதன் இடைவெளியில் பாறைக்குள் சென்றுள்ளது. நீரோட்டம் ஏற்பட்டதில் சுண்ணாம்பு பாறைகள் கரைந்திருக்கிறது. எனவே தான் மேற்பரப்பில் உள்ள பூமி உடைந்து உள்ளே சென்றுள்ளது. அதாவது அதிகமாக மழை பொழியும் இடங்களில் இதுபோன்ற சிங்க்ஹோல் இயற்கையாகவே தோன்றும் என்று கூறப்பட்டுள்ளது.