அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2021 ஆம் வருடம் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு 2021 ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 , குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு 2021 மே மாதத்தில் வெளியாகும். குரூப்-3 தேர்வுக்கு ஜூலையிலும், குரூப்-4 தேர்வுக்கு செப்டம்பரிலும் அறிவிப்பு வெளியாகும். இது ஒரு அரிய வாய்ப்பு எனவே தமிழக இளைஞர்களை மிஸ் பண்ணாதீர்கள்.