தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேரும், பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பெரும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 356 பேரும் மொத்தம்1016 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது ஹால் டிக்கெட் ஆதார் கார்டு மூலம் இணைக்கப்பட்டு பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மேலும் தேர்வர்களின் நலன் கருதி அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு எழுத வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு காய்ச்சல் இருக்கும் அறிகுறி தென்பட்டால் அவர்களை தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்.
தேர்வர்கள் தேர்வு அறைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் முறைகேடுகளை மீரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க இரண்டு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.