Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Group-2, Group-2A தேர்வுகள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி கட்டாயம் இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும்.

மேலும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை கண்காணிக்கும் பணிக்காக 321 பறக்கும் படைகள், 6400 ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 57 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 116 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும், 5413 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |