Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது.

குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC தற்போது காவல்துறையை நாடியுள்ளது.குரூப் 2-ஏ முறைகேட்டு புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இதனைத் தெரிவித்துள்ளது.

Categories

Tech |