Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : TNPSC ஊழியர்களிடம் விசாரணை ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை குரூப் ஃபோர் முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை CBCID காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறது . இந்த முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தற்போது தேர்வாணையத்தில் பணியாற்றக் கூடிய மூன்று பேரை CBCID போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதற்க்கு மூலகாரணமாக செயல்பட்ட ஜெயக்குமார் தலைமறைவாக இருக்க கூடிய நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகப்பேரில் இருக்கக்கூடிய ஜெயக்குமார் இல்லத்தில் சோதனை  நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |