குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேர்ரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் ஏதேனும் ஆவணம் கிடைக்குமா ? என்று சிபிசிஐடி எதிர்நோக்கி சோதனை நடத்தி வருகின்றது. ஜெயக்குமார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கில் கைது ஆகாமல் நீதிமன்றம் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.