டெலிகிராமில் குழு காணொளி அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டெலிகிராம் தங்களது பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு ப்ளே ஸ்டோர் மூலமாக, பயனர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு எவ்வாறு மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோன்று தற்போது காணொலி அழைப்புகளை செய்து வருகின்றனர். இதற்க்கு உதவும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், பயனர்களுக்கு எளிமையாக பயன்படுத்தக்கூடியதாகவும், அதிகப்படியான பாதுகாப்பினை அளிப்பதாகவும் இருக்கும் என கூறியுள்ளது.
இவ்விரண்டு பரிமாணங்களையும் கருத்திற்கொண்டு,டெலிகிராம் தனது செயலியை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. டெலிகிராம் இப்பொது 40 கோடி மாதாந்திர பயனர்களை அடைந்துள்ளது. இதுவே 2019 ஆம் ஆண்டு 30 கோடியாக இருந்துள்ளளது. ஒவ்வொரு நாளும் 15 லட்சம் புதிய பயனர்களுக்கு குறையாமல் டெலிகிராமில் பதிவு செய்கிறார்கள். கிளவுட் ஸ்டோரேஜ், கோப்புறைகள் மற்றும் டெஸ்க் டாப் ஆதரவு போன்ற அம்சங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருப்பது தான் டெலிகிராம் வளர்ச்சிக்கான காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.