தேவையான பொருட்கள் :
கருஞ்சீரகம் – 2 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு
செய்முறை :
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , பொடித்த கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும் . சலசலப்பு அடங்கியதும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை தினமும் தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாக வளர்வதை இரண்டு வாரங்களில் உணர முடியும் .