Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”வளர்ச்சியும் பணவரவும்”…. விளையாட்டுத் துறையில் ஆர்வம்…!!!

சிம்ம ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணி புரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் மேலோங்கும். எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள்.

அனைவரையும் சமமாகவே பாவிப்பீர்கள. அனைவரிடமும் அன்பும் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். இன்றைய நாள் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் இன்னைக்கு ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதி ஆகவே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் சற்று குறைவாகத்தான் இருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகமாகவே காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த உணவை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |