நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது.
அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் 754இல் இவ்வாறு கூறுகிறார்,
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.”
இதன் விளக்கம், “சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.” என்பதே ஆகும்.
2020-21ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் குறித்த பொருளாதார ஆய்வறிக்கைகளை பார்க்கும்போது அடுத்து வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரியவருகிறது.
ஏற்றுமதி வணிகம் :
உலகளாவிய ஏற்றுமதியால் இந்தியாவில் வேலை வாய்ப்பு மற்றும் செல்வ வளம் உருவாக்கப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஏற்றுமதி 7 ட்ரில்லியன் டாலரை எட்டும். அதன் நீட்சியாக 2030ஆம் ஆண்டுக்குள் நல்ல சம்பளத்தில் 4 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வர்த்தக சேவைகளின் வளர்ச்சி:
இந்தியாவில் வர்த்தக சேவையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த வகையில் உலகளாவிய வர்த்தக சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடன் வாங்கிக்கொண்டு வேண்டுமென்றே கட்டத்தவறியவர்களால் பொருளாதாரத்தில் அரிப்பு (நஷ்டம்) ஏற்படுகிறது. அந்த வகையில் செலவு காரணிகளாக மகாத்மகா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உர மானியம் உள்ளிட்டவைகள் உள்ளன.
மானிய திட்டங்கள்:
இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணம் வீணாகிறது. ஆனால் இரு திட்டங்களும் தேவையானவை. ஏனெனில் இது அடித்தட்டு மக்களை சென்றடைகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு 55 ஆயிரம் கோடிகளும், உர மானியத்துக்கு 70 ஆயிரம் கோடிகளும், கிராமப்புற வளர்ச்சிக்கு 115 ஆயிரம் கோடிகளும், வேண்டும்மென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களால் 136 ஆயிரம் கோடிகளும், சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்புக்கு138 ஆயிரம் கோடிகளும், ரயில்வே மூலதனங்களுக்கு 149 ஆயிரம் கோடிகளும், உணவு வழங்கல் மானியத்துக்கு 169 ஆயிரம் கோடிகளும் செலவிடப்படுகின்றன.
சுப்ரமணியன் தகவல் :
2020ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை குறித்து, நாட்டின் தலைமை பொருளாதார அறிஞர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறும்போது, “2013ஆம் ஆண்டிலிருந்து முதலீடு குறைந்ததால் நாட்டில் பொருளாதாரத்தில் சுணக்கம் 2017ஆம் ஆண்டில் தொடங்கியது. அதாவது நிறுவனங்கள் 2008-12ஆம் ஆண்டுகளில் கடன் அதிகமாக வாங்கின. எனினும் 2013-17ஆம் ஆண்டுகளில் அந்தளவு முதலீடு செய்யவில்லை.
இதனை சமாளிக்க பத்து புதிய யோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அனைத்து பொருளாதார குழுக்களும் மந்தமடைந்துள்ளன. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் இந்தியாவும் அதன் விளைவை உணர்ந்திருக்கிறது. பொருளாதார ஆய்வு 2019-20 என்பது பழைய மற்றும் புதியவற்றின் தொகுப்பு ஆகும்.
இந்தியப் பொருளாதாரம் செல்வத்தை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் பெரிதளவு இல்லை. உலகளாவிய தாக்கத்தையும் சமாளிக்கிறது. ஆக, இந்தாண்டு நமது கருப்பொருள், “செல்வத்தை உருவாக்குவோம்” என்பதே.
மேலும், இந்தியாவின் பெரிய பொருளாதாரம் அதன் வளர்ச்சியை ஆதரிக்க திறமையான வங்கித் துறை தேவை. இந்தியாவில் வங்கித் துறையின் நிலை அவசர கவனம் தேவை. ஃபின் டெக் மூலம் பொதுத்துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவது முன்னோக்கி செல்லும் வழி.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு வணிக சார்பு கொள்கையை ஊக்குவிப்பது அவசியம். உலகில் இந்தியாவில் மேக் இன் இந்தியா பொருட்களை ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி சந்தை 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.5 விழுக்காடாக இருக்கும். இதனை 2030 ஆம் ஆண்டில் 6 விழுக்காடாக உயர்த்த முடியும்” என்கிறார்.
பொருளாதார பற்றாக்குறை:
2019-20ஆம் ஆண்டு பொதுபட்ஜெட்டில், பொருளாதார பற்றாக்குறை ரூ.7.04 லட்சம் கோடியாக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காடு ஆகும். அந்த வகையில், 2018-19ஆம் ஆண்டு பொதுபட்ஜெட்டில் ரூ.6.49 லட்சம் கோடி பொருளாதார பற்றாக்குறை நிலவியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 விழுக்காடு ஆகும்.
விவசாய வளர்ச்சி :
நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மற்றும் அதன் சார்ப்புத்துறைகளின் வளர்ச்சி நடப்பாண்டில் 2.9 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 2.8 விழுக்காடாக இருக்கும்.
அந்நிய செலாவணி :
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு நல்ல நிலையில் உள்ளது. அந்த வகையில் 2018-19ஆம் ஆண்டுகளில் 412.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய செலாவணி 2019-20ஆம் ஆண்டுகளில் 461.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் :
நாட்டின் பணவீக்கம் கடுமையான சரிவை சந்தித்துவருகிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்கள் முறையே 3.2, 2.6 விழுக்காடாக உள்ளது. இது பொருளாதார தேவைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதை காண்பிக்கிறது.
தொழிற்சாலை வளர்ச்சி:
2019-20ஆம் ஆண்டுகளில் தொழிற்சாலை வளர்ச்சி 2.5 விழுக்காடாக இருக்கும் என 2020ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சி 2017-18, 2018-19ஆம் ஆண்டுகளில் முறையே 5.9 மற்றும் 6.9 விழுக்காடாக இருந்தது.
உணவு தானியங்கள் உற்பத்தி
உணவு தானியங்கள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. உணவு உற்பத்தியானது 2016-17ஆம் ஆண்டுகளில் 275.1 மில்லியன் டன்னாக இருந்தது.
இது அடுத்த இரு ஆண்டுகளில் 285.0 மில்லியன் ஆண்டுகளாக திகழ்ந்தது. ஆனால் 2019-20ஆம் ஆண்டுகளில் 140.6 மில்லியன் டன்னாக குறைந்து விட்டது.இதன் வளர்ச்சியை அதிகரிக்க புதிய யோசனை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சியை அதிகரிக்கவும், வணிகத்தை ஊக்குவிக்கவும் தடைகற்களாக உள்ள சிவப்பு கோடுகள் (சட்டங்கள் இதர எல்லைகள்) தளர்வுகள் ஏற்படுத்தப்படலாம்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6-6.5 விழுக்காடாக இருக்கும். பொருளாதார ஆய்வு தற்போதைய நிதி வளர்ச்சியை 5 விழுக்காடாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியைப் புதுப்பிக்க நடப்பு நிதிக்கான நிதி பற்றாக்குறை இலக்கு தளர்த்தப்பட வேண்டும் என்றும் ஆய்வு கூறுகிறது.
தேவை :
ஏற்றுமதி வணிகத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில சிறப்பியல்புகள் மற்றும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. சீனா தனது தொழிலாளர்களை கவனமாக கையாளுகிறது. இந்தியாவும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் முதல்கட்ட அமர்வு வருகிற 11ஆம் தேதியுடன் நிறைவடையும். அடுத்தகட்டமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும்.