ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் விரும்பி கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சிலர் அதிகாரிகள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு மிகுந்த முயற்சிக்குப் பின்னர் வேலை கிடைக்கும்.
இன்று வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தாருடன் ஒன்று சேருவீர்கள். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் இன்று கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உண்டான வேலைகளை இப்பொழுது செய்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கொஞ்சம் விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்