2021 – 22ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என RBI ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.2021 -22 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 இருக்கும்.
கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையை நீடிக்கிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 கணித்துள்ளது. ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கொரோனா காரணமாக நாட்டின் மின்சாரத் தேவை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.