Categories
தேசிய செய்திகள்

GSLV F10 ராக்கெட்…. நாளை காலை 5.43 மணிக்கு விண்ணில் பாய்கிறது….!!!!

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட்டாகும்.  இந்நிலையில், பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை விண்ணில் செலுத்தப்படும். அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Categories

Tech |