இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று நள்ளிரவு 12:7 மணி அளவில், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Network access associated limited நிறுவனத்திற்கு ஒப்பந்தமான 36 பிராண்ட் பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இவைகள் பூமியில் குறைந்த அளவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த உதவுகிறது. இந்நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டன் தொடங்கியுள்ளது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவுவதை பொதுமக்கள் பார்க்கும் விதமாக ஸ்ரீஹரிகோட்டாவில் 5,000 பேல் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என இஸ்ட்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், http://lvg.sgarmtov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடுவதற்கு செல்ல விரும்புவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பான பல அதிகாரப்பூர்வ தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.