Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்….. வெளியான பட்டியல்….!!

ஜிஎஸ்டி வரி  சதவிகிதம் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். 

இன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சில பொருட்களில்  ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அருண் ஜெட்லியின் பங்கு மிக முக்கியமானது. இது வரலாற்றில் முக்கியமான சாதனையாகும். இந்த ஜிஎஸ்டி திட்டத்தால், பலர் ஒழுங்காக வரி கட்டி வருகிறார்கள் என தெரிவித்தார்.

இதை அடுத்து, சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார் . அதில், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், பற்பசை, சோப்பு  உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 29.3 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் வரி, உணவுப்பொருட்கள், உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட  வரி  குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |