நாடுமுழுவதும் 2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு இதுவரை முறையாக வழங்கவில்லை.
இந்நிலையில், ஜிஎஸ்டி கால வரம்பு வருகின்ற ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் முறையை இன்னும் 2 வருடங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க மாற்று ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.